மலைநாடான் பக்கங்கள்

 










































வணக்கம்! வாருங்கள் நண்பர்களே!

ஈழத்தின் நெய்தல் நிலமொன்றில் பிறந்து, மருதநிழலில் வளர்ந்து, முல்லை வனங்களில் திரிந்து, ஐரோப்பாவின் குறிஞ்சிமுகடுகளில் வாழும், ஒரு ஈழத்தமிழன்.

வசந்தகால வாழ்வின் திருகோணமலையும், வந்தபோது புலத்தில் ரசித்த அல்ப்ஸ் மலையும், மனதை நிறைத்ததினாலும், மலையகத் தமிழர் நிலை மனதை வருத்தினதாலும், ஆனேன் மலைநாடான்.

கொஞ்சமாய் முத்தமிழிலும், ஒரு வெள்ளாட்டு மேச்சல். ஓவியம், சிற்பம், ஒளிப்பதிவு, என்பவற்றிலும் ஏகலைவத் தேடல்கள். பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சியென, ஊடகத்துறை சார்ந்து உழைத்ததுமுண்டு. படைப்புக்கள் பல உருவாக்கி பாதியில் நின்றதுண்டு. சில தேறி வந்ததுமுண்டு. சாதித்ததென ஏதுமிருப்பதாய் எண்ணவில்லை. சாதிக்கும் எண்ணம் இல்லாமலுமில்லை. வாழ்க்கைத்தேடலுக்கென சமூகம் சார்ந்தும், வணிகம் சார்ந்தும், பணிகள்.
பெற்றது நல்ல நட்புக்கள். கற்றது நிறைந்த அனுபவங்கள். இருக்கும்வரை உதவவேண்டும். இயலும்வரை உழைக்கவேண்டும். அறிவுத்தேடல், அது தொடர்ந்த வண்ணமே... அந்த வழிநடக்கையில் இங்கேயும் ....

- நட்புடன்
மலைநாடான்


               





















                                                                                                 
முகப்புக்குச் செல்ல..




2007. (c) All rights reserved.    │   முகப்பு   │   மின்னஞ்சல்:- malainaadaan@hotmail.com   │    வடிவமைப்பு:  கானம்