மலைநாடான் பக்கங்கள்

 










இணைப்புக்கள்


> ETR வானொலி
> லங்காசிறி
> தமிழ்நாதம்
> தமிழ்மணம்
> பூங்கா
> தேன்கூடு
> வலைச்சரம்
> மாற்று



















































இவர்கள் இப்படிச் சொன்னார்கள்!



நாமே என்னவோ நமது திருப்திக்காகத்தான் எழுதுகின்றோம். ஆனால் வாசிப்பவர்கள் எமது எழுத்தைப்பற்றி என்ன நினைக்கின்றார்கள் என்பதும் தெரிந்திருக்க வேண்டுமல்லவா?, முயன்றபோது..
-----------------------------------------------------------------------------                
ஜெகத்
மற்றவர் எழுத்தைக் குறித்துக் கருத்துக் கூறும் இடத்தில் கூட சுய புராணம் தேவையா என்று எழும் மனசாட்சியின் கேள்வியைத் தலையில் தட்டி அமர்த்திவிட்டுத் தொடங்குகிறேன்.

நான் ஒவ்வொரு முறையும் ஊருக்குப் பயணிக்கும் விமானம் திருவனந்தபுரத்தில் தரையிறங்குவதற்கு சுமார் முக்கால் மணி நேரம் முன்னால் விமானி ஒரு அறிவிப்பு செய்வார்: "நாம் இப்போது இலங்கையின் வடக்குப் பகுதியின் மேல் பறந்துக் கொண்டிருக்கிறோம்". எவ்வளவு உறக்கத்தில் இருந்தாலும் விழித்துக் கொண்டுப் பக்கவாட்டுக் கண்ணாடி வழியாகக் கீழே ஏதாவதுத் தெரிகிறதா என்றுப் பார்த்துக் கொண்டிருப்பேன்.


                                                                                       மேலும்....
               
ஏ.ஜி.யோகராஜா
குறிஞ்சி மலரை உறிஞ்சிய அளவில்… பெண்கள் தினத் திருநாளில் -மார்ச் 08ல்- இதழ் விரித்த மலை நாடானின் குறிஞ்சி மலர் (08. 03. 07)அன்று வயது 2ல் கால் பதிக்கிறது. வாழ்த்துவோம்! வரவேற்போம்!.

குறிஞ்சி மலரில்… சமூகம், சினிமா, செய்திவிமர்சனம், ஆன்மீகம் பண்பாட்டுக்கோலம், நட்சத்திரவாரம் என்று பலவித பிரிவுகளில் பவனி வருகிறார் மலைநாடான். இங்கு நான் உறிஞ்சியவற்றில் பல கடந்த காலங்களின் மீளுயிர்ப்புகளே! உடைந்து போன மனங்களுக்கும் உயிர் கொடுக்க விளைகிறார். ஆன்மிக அலசல்களும் வந்து போகின்றன. துாரத்து நட்சத்திரங்களையும் பிரதிபலிக்கத் தவறவில்லை குறிஞ்சி மலர்.


                                                                             மேலும்....
               
செல்வநாயகி
ஒருநாள் என்பது காலை எழுந்தவுடன் பல்துலக்கித் துவங்குவதில் ஆரம்பித்து, இரவு படுக்கைக்குப் போகும் முன் சிறுநீர் கழித்துவிட்டுத் தூங்கப்போவதோடு முடிந்துவிடுவதில்லை. ஒருநாளை உண்மையாக வாழமுடிந்தால் அந்நாள் சிலபல கேள்விகளை விதைத்தும், புரிதல்களை ஏற்படுத்தியும் போகிறது.

"என் வலைப்பதிவுக்கு வயது வரும் மார்ச்சோடு ஒன்றாகிறது, நீங்கள் என் எழுத்துக்கள் மீதான உங்கள் பார்வைகளை, எண்ணங்களை எனக்கு எழுதித்தரமுடியுமா?" எனக்கேட்டு மலைநாடானின் மின்னஞ்சல் வந்தநாளும் முதலில் எனக்குள் சில கேள்விகளை ஏற்படுத்தியது. அவை "வலைப்பதிவுலகில் இப்படியெல்லாம் எழுதிக்கொடுப்பதும், வாங்குவதும் தேவையா?" என்கிற முதல் கேள்வியில் ஆரம்பித்தது. பிறகு இதில் ஒன்றும் தவறில்லை என்கிற புரிதல் வந்தநிமிடத்தில் "கொஞ்சம் அவகாசம் கொடுங்கள், உங்கள் இடுகைகள் அனைத்தையும் படித்துமுடித்தபின் எழுதிவிடுகிறேன்" என்று பதில் அனுப்பினேன். ஆனால் இதில் முதல்கேள்விக்கும், கடைசியாக ஏற்பட்ட புரிதலுக்குமிடையில் தோன்றி மறைந்த எண்ணங்கள் ஏராளம்.
                                                                                       மேலும்....
               
                                                                                                 
முகப்புக்குச் செல்ல..




2007. (c) All rights reserved.    │   முகப்பு   │   மின்னஞ்சல்:- malainaadaan@hotmail.com   │    வடிவமைப்பு:  கானம்